தொகுப்பூதியம் வழங்கக்கோரி தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்

தொகுப்பூதியம் வழங்கக்கோரி தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

தொகுப்பூதியம் வழங்கக்கோரி தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள படாலத்தில் இயங்கி வரும் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தின கூலி தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களை தொகுப்பூதியம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி 200 - க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாளர்கள் வருகின்றனர்.

இந்த ஆலையில் தின கூலி பணியாளர்கள் வெல்டர், டர்னர், கிரேன் ஆபரேட்டர், இயந்திர பணியாளர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனித, தனியாக பணியாளர்கள் தேர்வு செய்து பணி அமர்த்தாமல் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி பணியாளர்களை தேர்வு செய்து 12 ஒப்பந்தகாரர்களின் கீழ் 200-க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்களை நியமித்துள்ளனர். ஒப்பந்த தின கூலி தொழிலாளர்கள் தொகுப்பூதிய பணியாளர்களாக தொழிலாளராக மாற்றப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என .இதுவரை நடவடிக்கை இல்லை.

தமிழகம் முழுதும் மற்ற சர்க்கரை ஆலைகளில் தொகுப்பு புதிய பணியாளர்கள் பணியாற்றி வருகின்ற நேரடியாகவே சம்பளம் மற்றும் பணிக்கான பலனை அனுபவித்து வருகின்றனர்.ஆனால் இந்த படாளம் சக்கரை ஆலையில் மட்டும் ஒப்பந்த தின கூலி தொழிலாளர்களைக் கொண்டு ஆலை இயங்கி வருகிறது. இன்று 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தினக்கூலி தொழிலாளர்கள் ஆலயம் உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story