சிவகங்கை சுயேட்சை வேட்பாளரின் ரகசியத்தால் பரபரப்பு
சுயேட்சை வேட்பாளர்
புதுக்கோட்டை மாவட்டம், மேல்நிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். பரிசீலனை முடிந்து பழனியப்பன் மனு ஏற்றுக் கொண்டதையடுத்து வெளியே வந்து ரகசியத்தை உடைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
இந்தியா முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் சுயேட்சையாக போட்டியிடும் அனைவரும் ஒரு குழு அமைத்து பேசி முடிவு செய்துள்ளதாகவும், தான் தான் பிரதமர் வேட்பாளர் என்றும், பிஜேபி காங்கிரசுக்கு மாற்றாக தங்கள் அணி மாறப்போகிறது எனவும், ஒவ்வொரு தொகுதியிலும் பத்துக்கு மேற்பட்ட சுயேச்சைகள் போட்டிட்டு ஆதரவு இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு குழுவாக பேசி தனிமரம் தோப்பாகாது ஒன்றாக சேர்ந்து புரட்சி ஏற்படுத்தும்,
முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் எனவும், இந்த ரகசியத்தை முன்பே சொல்லியிருந்தால் விலை பேசி விடுவார்கள் எனவும் தெரிவித்தார். தேர்தல் களத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் ஏதாவது செய்வார்கள்.
ஆனால் சிவகங்கை சுயோட்சை வேட்பாளர் பழனியப்பன் மௌனத்தை கலைத்து ரகசியத்தை உடைத்து, தன்னை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லியும், தங்களுடைய தேர்தல் அறிக்கை வெற்றியை தேடித்தரும் என கூறியது அங்கிருந்தவர்களிடம் சிரிப்பலைகளை உருவாக்கியது