சிவகங்கை நகராட்சி ஆணையாளர் திடீர் மாற்றம்

சிவகங்கை நகராட்சி ஆணையாளர் திடீர் மாற்றம்
X

நகராட்சி அலுவலகம்

சிவகங்கை நகராட்சி ஆணையாளர் திடீர் மாற்றம் செய்யப்பட்டு புதிய அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை நகராட்சி புதிய ஆணையராக கிருஷ்ணராம் நியமனம் செய்யப்பட்டாா். ஏற்கெனவே சிவகங்கை நகராட்சி ஆணையராக இருந்த செந்தில்குமாா் குளச்சல் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, ஆற்காடு நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த கிருஷ்ணராம் சிவகங்கை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா்.

இதற்கான அறிவிப்பை நகராட்சி நிா்வாக இயக்குநரகம் வெளியிட்டது. சிவகங்கை நகராட்சியில் கடந்த 6 மாதங்களில் 3ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே சிவகங்கை நகராட்சியில் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் வரி வசூலித்தால்தான் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும் என்ற நிலை உள்ளது. வளர்ச்சித் திட்டப் பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆணையர்களை அடிக்கடி மாற்றி வருவது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story