சிங்கப்பூரிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த சிவகங்கை பயணி கைது
சிங்கப்பூரிலிருந்து 4 வருடங்கள் கழித்து மதுரை விமான நிலையம் வந்த சிவகங்கை சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரிலிருந்து 4 வருடங்கள் கழித்து மதுரை வந்த சிவகங்கை சேர்ந்த பயணி கைது. கொலை முயற்ச்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் 4 வருடங்களாக சிவகங்கை போலீஸாரால் தேடப்பட்டவர் மதுரை விமானநிலையத்தில் கைது சிவகங்கை மாவட்டம் நெடுமரம் கிராம் தெற்கு வளைவு தெருவை சேர்ந்த சின்ன கருப்பன் என்பவரின் மகன் கலையரசன் (வயது 50, ) இவர் மீது கடந்த 2020ஆம் ஆண்டு நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்ச்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் தலைமறைவானார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர். அதனைத் தொடர்ந்து தேடப்படும் குற்ற வழியாக அறிவிக்கப்பட்ட கலையரசன் இன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அதனை தொடர்ந்து மதுரைவிமான நிலையத்தில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்ததில் 2020 ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளி என கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் நாச்சியார் புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாச்சியாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் கலைவாணி மற்றும் காவல் துறையினர் மதுரை விமான நிலையம் வந்தடைந்து கலையரசனை கைது செய்து அழைத்துச் சென்றனர் கொலை முயற்சி வழக்கில் நான்கு ஆண்டுகள் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த கலையரசன் மதுரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பாக காணப்பட்டது