சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி

சிவகங்கை ஆட்சியர்

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " தமிழக முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இதில், பசுந்தாள் உரம் மூலம் மண்வளம் காக்கும் வகையில் இறவை பாசன பகுதிகளில் 4,000 ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.80 லட்சம். மண்புழு உரம் தயாரிக்க ஒரு விவசாயிக்கு இரண்டு மண்புழு உரப்படுக்கை வீதம் 300 விவசாயிகளுக்கு ரூ.18 லட்சம். உயிா்ம வேளாண்மைக்கு இன்றியமையாத பஞ்சகாவ்யா, ஜீவாமிா்தம், மண்புழு உரம் அமிா்த கரைசல், மீன் அமிலம் போன்றவை தயாரிக்க ஆா்வமுள்ள 3 குழுக்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 3 லட்சம்.

மானாவாரி நிலங்களில் கோடை உழவுக்கு ஏக்கருக்கு ரூ.500 மானியம்மற்றும் விதை மானியம் ஏக்கருக்கு ரூ.700 வீதம் 3000 ஏக்கருக்கு ரூ.36.00 லட்சம். இயற்கை வேளாண்மைக்கான மாதிரி பண்ணைத்திடல் அமைக்க முன்வரும் 12 விவசாயிகளுக்கு தலா 10,000 வீதம் 1.20 லட்சம்.

வேம்பில் இருந்து கிடைக்கும் அசாடிராக்டின் மூலப்பொருள் மூலம் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தவும் , பசுந்தழை உரமாக பயன்படுத்தவும் 35,000 வேப்பங்கன்றுகள் ரூ.7 லட்சம். இயற்கையிலேயே உயிரி பூச்சிக்கொல்லி பண்புகளுடைய ஆடாதொடா நொச்சி போன்ற தாவரங்களின் செடிகள் தரிசு நிலங்களிலும், வரப்புகளிலும் நடவு செய்ய 1,50,000 கன்றுகள் ரூ.3 லட்சம்.

நெல் ஜெயராமனின் மரபுசாா் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் பாரம்பரிய நெல் இரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி, சீரக சம்பா, தூயமல்லி போன்ற ரகங்களின் விதைகள் 7,000 கிலோவுக்கு ரூ.1.75லட்சம் உள்பட மொத்தம் ரூ.1.50 கோடி மதிப்பில் மானியம் வழங்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்

Tags

Next Story