சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் - முதன்மை மாவட்ட நீதிபதி தகவல்
உச்ச நீதிமன்றம் (பைல் படம்)
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு வருகிற 29 முதல் ஆக.3-ஆம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவுள்ள சிறப்பு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் சமரச முறையில் தீா்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது வழக்குகள் ஏதேனும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், அந்த வழக்குகளை சமரச முறையில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு காணலாம். வழக்கு தொடா்பான விவரங்களை தங்களது அருகில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சட்ட உதவி மையத்தில் தெரிவிக்கலாம். சிவகங்கை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவை 04575-242 561, மாநில சட்டப்பணிகள்ஆணைக் குழுவை 044-25342441 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். வழக்காடிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்
Next Story