குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் சிவகங்கை மாவட்டம் முதலிடம்

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் சிவகங்கை மாவட்டம் முதலிடம்

விருதுடன் தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் முத்து 

குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு நடவடிக்கையில் மாநில அளவில் சிவகங்கை முதலிடத்திற்கான விருதை பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறை மூலம் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து ஒழித்தல், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசின் நிவாரணம், இழப்பீடு பெற்றுத்தருதல், குழந்தைகள் கல்விக்கு உதவுதல் போன்ற பணிகளை செய்து வருகிறது. குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக சிவகங்கையை உருவாக்கும் நோக்கில், தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் முத்து தலைமையில் அலுவலர்கள் மாவட்ட அளவில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு, நிவாரணம் பெற்று தந்துள்ளனர். இதன் காரணமாக மாநில அளவில் குழந்தை தொழிலாளர்களை ஒழித்த மாவட்டத்தில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான அரசின் விருதை சென்னையில், சிவகங்கை தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் முத்து பெற்றுள்ளார். இத்துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பாராட்டினார்.

Tags

Next Story