ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடிய அதிமுகவினர்

ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடிய அதிமுகவினர்

ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடி கட்சியினர்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரண்மனை வாசலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்‌.

பின்னர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

Tags

Next Story