சிறுமிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
பைல் படம் 
இராஜபாளையம் அருகே திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தொழிலாளிக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் காவல் நிலைய உட்கோட்டம், தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் சின்னமணி (22) கூலி தொழிலாளியான இவர் 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இது குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னமணியை கைது செய்தனர்.இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சின்னமணிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்க பரிந்துரை செய்தார்.

Tags

Next Story