சிவகாசி : காமராஜர் பூங்காவில் காத்திருக்கும் ஆபத்து

சிவகாசி : காமராஜர் பூங்காவில் காத்திருக்கும் ஆபத்து

சேதமடைந்துள்ள பூங்காவின் சுற்றுச் சுவர்

சிவகாசி காமராஜர் பூங்காவின் சுற்றுச் சுவர் சீரமைக்கப்படாததால் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர் பகுதியில் காமராஜர் பூங்கா 50 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது.மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் வந்து பொழுதினை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர். குழந்தைகள் விரும்பும் வகையில் இங்கு ஊஞ்சல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்காக பூங்காவினை அவ்வப்போது பல லட்சம் செலவழித்து புதுப்பித்து வருகின்றனர்.மேலும் சிவகாசி நகர மக்கள் பல ஆண்டுகளாக ஏங்கிய விஷயமாகவும் நம்ம சிவகாசி என்ற எழுத்து வடிவில் அழகான வரவேற்பு சின்னம், காமராஜர் பூங்கா பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.நம்ம சிவகாசி பக்கத்திலிருந்து தினமும் ஏராளமான இளைஞர்கள் செல்பி எடுக்க தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து பொழுதினை மகிழ்ச்சியாக கழித்து செல்கின்றனர்

.இந்த பூங்கா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பராமரிக்கப்பட்ட போதிலும் பூங்காவின் சுற்றுச் சுவர் சீரமைக்கப்படவில்லை.இதனால் சுற்றுச்சுவர் ஆங்காங்கே கடுமையாக சேதமடைந்து,எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாய நிலையிலும்,சுற்றுச்சுவர் விழுந்து உயிர்பலி ஏற்படும் முன்,மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story