சிவகாசி : சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் காயம்

சிவகாசி : சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் காயம்
விபத்து நடந்த பட்டாசு ஆலை
சிவகாசி அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் சின்னகருப்பு என்பவரின் மகன் ராஜபாண்டி சொந்தமான இடத்தில் சட்டவிரோமாக தகரசெட் அமைத்து பட்டாசு ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை செயல்பட்டு வந்த நிலையில் தகர செட்டின் மேற்கூரையை சரி செய்வதற்கு வெல்டர்களை வைத்து பணி செய்யும் போது சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த பேன்ஸி வெடி செய்யக்கூடிய மணி மருந்து மீது வெல்டிங் பட்டதில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டத்தில் அங்கு பணியிலிருந்த உரிமையாளர் சின்னகருப்பு,வீரலட்சுமி,மேலும் வெல்டிங் பணிக்கு வந்த தொழிலாளர்கள் அன்புராஜ், மகேந்திரன்,சதீஸ்குமார் படுகாயமடைந்த 5 பேரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையிலுள்ள தீக்காய பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்தில் தகர செட்டின் மேற்கூரை சுமார் 20 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டன.விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் சம்பவம் இடத்திற்கு வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்,சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்த ராஜபாண்டியனை தேடி வருகின்றனர்.

Tags

Next Story