குண்டாஸ் சட்டத்தை வரவேற்க்கும் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள்
சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் குண்டாஸ் சட்டத்தை வரவேற்றுள்ளனர்.
சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் குண்டாஸ் சட்டத்தை வரவேற்றுள்ளனர்.
சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை சார்பாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டம். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை சேர்ந்த அதிகாரிகள் தலைமையில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் வைத்து பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள்,மற்றும் பட்டாசு விற்பனையாளர்கள் என 300க்கு மேற்பட்டோர் கலந்த கொண்ட ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் பேட்டியில் கடந்த 2008 ஆம் ஆண்டு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நிகழ்ந்தது கிடையாது, பட்டாசு தொழிலுக்கு மத்திய மாநில அரசுகள் முழு ஆதரவளித்து வருகின்றன. கோடைகாலம் என்பதால் பட்டாசு ஆலைகள் காலை 6:00 மணியிலிருந்து ஒன்பது மணிக்குள்ளாக வெடி மருந்துகள் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளை முடிக்க வேண்டும். அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே இது தொடர்பாக எங்களது சங்க நிர்வாகிகளுக்கு குழு மூலமாக தெரிவித்து உள்ளோம்,மாவட்ட ஆட்சியர் பட்டாசு தொழிற்சாலைகள் விதிமுறைகளை மீறி செயல்படும் உரிமையாளர்கள் மீது குண்டாஸ் பாயும் என்றும் அந்த ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் இதற்கு டான் பார்மா உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
Next Story