கடம்பன்குளம் கண்மாய் விரைவில் தூர்வாரப்படும் - எம்.எல்.ஏ கணேசன் உறுதி

கடம்பன்குளம் கண்மாய் விரைவில் தூர்வாரப்படும் - எம்.எல்.ஏ கணேசன் உறுதி

எம்.எல்.ஏ கணேசன் ஆய்வு  

சிவகாசி அருகே கடம்பன்குளம் கண்மாயில் ஆய்வு செய்த எம்எல்ஏ அசோகன் கண்மாய் விரைவில் தூர்வாரப்படும் என உறுதியளித்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சி பகுதியில் கடம்பன்குளம் கண்மாய் உள்ளது.பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இந்த கண்மாய் சுமார் 54 ஏக்கர் பரபரப்பளவில் அமைந்துள்ளது. திருத்தங்கல்,நேரு காலனி முத்துராமலிங்கபுரம் காலனி, பகத்சிங்,திருப்பதி நகர், விவேகானந்தர் காலனி பகுதிகளுக்கு நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் இந்த கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் தற்போது பராமரிப்பு இன்றி,சீமை கருவேல செடிகள் வளர்ந்துள்ளனர. கண்மாய் நீர் வரும் ஓடைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு,சேதமடைந்தும் விட்டன.

இதனால் மழை நீர் கண்மாய்க்கு வருவதில்லை கண்மாயில் கட்டிட கழிவு,குப்பை கொட்டப்பட்டு,கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாக உள்ளது. இந்த கண்மாயின் கிழக்கு மற்றும் தெற்கு கரைகளை பலப்படுத்தி கிழக்கு கரையில் உள்ள மதகுகள் மற்றும் ஷட்டர்களை மராமத்து செய்து கண்மாய் முழுவதிலும் தூர்வரவேண்டும் என அசோகன் எம்எல்ஏ மற்றும் யூனியன் தலைவர் முத்துலட்சுமிடம் பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியன் கோரிக்கை வைத்தார்.அதனை தொடர்ந்து கடம்பன்குளம் கண்மாய் பகுதியை அசோகன் எம்எல்ஏ,பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியன் நேரில் ஆய்வு செய்து, கண்மாயை விரைவில் தூர்வாரி மதகுகள் மராமத்து செய்யும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அசோகன் எம்எல்ஏ தெரிவித்தார்.

Tags

Next Story