பட்டாசு விபத்து இல்லாத சிவகாசியை உருவாக்க

பட்டாசு விபத்து இல்லாத சிவகாசியை உருவாக்க

வருவாய் கோட்டாட்சியர்

பட்டாசு விபத்து இல்லாத சிவகாசியை உருவாக்க வேண்டும் என வருவாய் கோட்டாச்சியர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள தமிழ் நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் லைத்து,மாவட்ட நிர்வாகம் சார்பில் விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பட்டாசு உற்பத்தி செய்வது மற்றும் தொழிலாளர் நலன் காப்பது குறித்த ஆலோசனை கூட்டம் வருவாய் கோட்டாச்சியர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிவகாசி வட்டாட்சியர் வடிவேல் வரவேற்று பேசினார்.இதில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குனர் ராஜ்குமார் பேசியதாவது,பட்டாசு தொழிற்சாலைகளில் தேவையான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்று பேசினார்.

பின்னர் பேசிய ஆர்டிஓ விஸ்வநாதன் பேசியதாவது: இப்பகுதியில் உள்ள அனைவருக்குமே பட்டாசு தொழில் குறித்த போதுமான அறிவு உள்ளது. எதிர்பாராத தவறு, காலநிலை மாற்றம் காரணமாக விபத்து நடப்பது எதிர்பாராதது.ஆனால் விதிமீறல்,அலட்சியம் என நிறைய காரணங்களால் விபத்து நடக்கிறது. விபத்தில் உயிரிழப்பவர்கள் அந்தக் குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமாக உள்ளனர். அதனால் விபத்துக்கு பின்னர் அந்த குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள் அதிகம். கூட்டத்திற்கு வட்டாட்சியர்கள் வடிவேல்,மாரிமுத்து,சரஸ்வதி, ஜெயபாண்டி மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story