சிவகாசி சிவன் கோவில் 'ஆடி தபசு'திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..

சிவகாசி சிவன் கோவில் ஆடி தபசுதிருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..

 'ஆடி தபசு'திருவிழா 

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான,பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில்,'ஆடி தபசு' திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகாசி சிவன் கோவில் 'ஆடி தபசு'திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான,பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில்,'ஆடி தபசு' திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக ஸ்ரீவிஸ்வநாத சுவாமிக்கும், ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து ஸ்ரீவிஸ்வநாத சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் - பிரியாவிடையுடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.இதனையடுத்து, அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனையடுத்து,வேத மந்திரங்கள் முழங்க 'ஆடி தபசு' திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து கொடி மரத்திற்கு கலசங்களில் கொண்டு வரப்பட்ட புனிதநீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.ஆடி தபசு கொடியேற்றம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 'சட்ட தேரோட்டம்' திருவிழா வரும் 19ம் தேதி (வெள்ளி கிழமையும்),வரும் 21ம் தேதி (ஞாயிறு கிழமை) ஸ்ரீவிஸ்வநாதசுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு தபசு காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகளும்,நிகழ்ச்சி உபய தாரர்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story