சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம்

சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம்
சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று இரவு கொடியேற்றத்துடன் தொடக்கம்..
சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள,பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா, இன்று இரவுகொடியேற்றத்துடன் தொடங்குகிறது.சிவகாசி இந்து நாடார் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா அதிவிமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா இன்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது.இன்று இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் ஸ்ரீபத்திரகாளியம்மன் வெள்ளி சிங்க வாகனத்தில் எழுந்தருளி கோவிலுக்கு வருவார்.

ஸ்ரீபத்திரகாளியம்மன் கோபுர வாசலில் எழுந்தருளியவுடன் சித்திரை திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும்.இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் கண் கவரும் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.பின்னர் ஸ்ரீபத்திரகாளியம்மன் ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.

வரும் மே5ம் தேதி பிரசித்தி பெற்ற ஆறாம் திருவிழாவும்,7ம் தேதி சித்திரை பொங்கல் திருவிழாவும்,8ம் தேதி கயர்குத்து மற்றும் அக்கினிச் சட்டி திருவிழாவும் நடைபெறும்.வரும் மே 10ம் தேதி சித்திரை திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகளும்,உபயதாரர்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story