சிவன்மலையில் ரூ. 34.87 லட்சம் உண்டியல் காணிக்கை 

சிவன்மலை முருகன் கோவிலில் ரூ. 34.87 லட்சம் உண்டியல் காணிக்கை மூலம் பெறப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சிவன்மலை முருகன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு அறநிலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் நிர்வாக ஊழியர்கள் மூலம் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் எண்ணப்படும் பணி நடைபெற்றது.மதியம் 12 மணி அளவில் சிவன்மலை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ரத்தினாம்பாள் தலைமையில் கண்காணிப்பாளர் பால்ராஜ் முன்னணியில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் மு. ரமணிகாந்தன் மேற்பார்வை உண்டியல் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் பணம் ரூ. 34 லட்சத்து 87 ஆயிரத்து 337 ரொக்கமும், தங்க நகை 128 கிராமும் , வெள்ளி 479 கிராமும் உண்டியலில்களில் காணிக்கையாக செலுத்த பட்டிருந்தது. மதியம் துவங்கிய பணியானது மாலை முடிவடைந்தது. மேலும் கோவில் உண்டியல் காணிக்கை கோவில் பெயரில் உள்ள வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அறநிலையத்துறை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story