ஸ்கேட்டிங் போட்டி

ஸ்கேட்டிங் போட்டி

வாசுதேவநல்லூர் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் துரோணா கல்ச்சுரல் & ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.

வாசுதேவநல்லூர் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் துரோணா கல்ச்சுரல் & ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் கிளப் ஆப் புளியங்குடி மற்றும் துரோணா கல்ச்சுரல் & ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஸ்கேட்டிங் போட்டி நேற்று நடைபெற்றது.

ஸ்கேட்டிங் போட்டியை பள்ளி முதல்வர் குழந்தைசாமி துவக்கி வைத்தார். வாசு காவல் உதவி ஆய்வாளர் அவவீனா முன்னிலை வகித்தார். இப்போட்டியில் தரணி இன்டர்நேஷனல் சிபிஎஸ் இ பள்ளி முதலிடத்தை பிடித்தது. தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது. குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புளியங்குடி எஸ் வி சி சாய் நிகேதன் சிபிஎஸ்இ பள்ளி, கடையநல்லூர் கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஹில்டன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, மவுண்ட் ஹில்டன் சி பி எஸ் சி பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story