கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் ஸ்கேட்டிங் போட்டி
ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டவர்கள்
கும்பகோணம் , கார்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியானது நடைப்பெற்றது.இப்போட்டியானது ஆறு பிரிவுகளாக ,
வயதின் அடிப்படையில், ஆறு வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் , எட்டு வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் , பத்து வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் , பனிரெண்டு வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் , பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடைபெற்றது .
இப்போட்டியில் கும்பகோணம் பகுதியை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் . இப்போட்டியானது மாணவ மாணவியர்களுக்கு சிறந்த உடற் பயிற்சியாக அமைந்தது . ஸ்கேட்டிங் செய்வதால் தசைகள் வலுப்பெறும் . மூட்டுகள் வலுப்பெறும் .
மேலும் ஸ்கேட்டிங் செய்யும் போது ஆழ்ந்து சுவாசிப்பதால் சிறந்த மூச்சு பயிற்சியாகவும் உள்ளது . இவ்வாறு மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுத்தும் ஸ்கேட்டிங் போட்டியினை பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் அவர்கள் துவங்கி வைத்து, மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்தினை தெரிவித்தார்கள் .
இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்த பள்ளி தாளாளர் கார்த்திகேயன் அவர்களுக்கு மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் நன்றியினை தெரிவித்தார்கள். சிறப்பாக விளையாடி முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன . போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன .