திறன் மேம்பாடு சான்றிதழ் வழங்கும் விழா

ஊத்தங்கரை அருகே திறன் மேம்பாடு சான்றிதழ் வழங்கும் விழாவில் பேரூராட்சி தலைவர் அமானுல்லா பங்கேற்றார்.
ஊத்தங்கரை அருகே திறன் மேம்பாடு சான்றிதழ் வழங்கும் விழா பேரூராட்சி தலைவர் அமானுல்லா பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாரதிபுரம் கிராமத்தில் சென்னை மத்திய காலணி பயிற்சி மையமும், ஊத்தங்கரை வெல்பர் டிரஸ்ட் இணைந்து நடத்திய, ஸ்டிச்சர் லெதர் கூட்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் திறன் மேம்பாடு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. வெல்பர் டிரஸ்ட் இயக்குனர் எஸ்.ராமு வரவேற்றார். ஊத்தங்கரை பேரூராட்சி மன்ற தலைவர் பா. அமானுல்லா தலைமை வகித்து கார்மெண்ட்ஸ் திறன் மேம்பாடு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் 2 வது வார்டு உறுப்பினர் கனகேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர் மைனாவதி மற்றும் சமூக சேவகர்கள் சிவகுமாரி ,தனலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மைய செயல்பாடுகள் குறித்து பயிற்சியாளர் மருதுபாண்டியன் விளக்கம் அளித்தார். இறுதியாக ஸ்ப்ரிங் டிரஸ்ட் இயக்குனர் கீதா நன்றி கூறினார்.இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story