பெரியசெவலையில் கரும்பு விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

பெரியசெவலையில் கரும்பு விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை கிராமத்தில் செங்கல்ராயன் கூட்டுறவுசர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் நிர்வாகம், திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.


விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை கிராமத்தில் செங்கல்ராயன் கூட்டுறவுசர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் நிர்வாகம், திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலை கிராமத்தில் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் நிர்வாகம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை ஆலையின் மேலாண்மை இயக்குனர் முத்துமீனாட்சி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆலையின் அரவை, விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நல்ல முறையில் நடைபெறுகிறது.

சர்க்கரை கட்டுமானம் 9.5 சதவீ தத்திற்கு கூடுதலாக வருகிறது. இதனை மேலும் அதிகரிக்க சுத்த மான கரும்பை அறுவடை செய்து விவசாயிகள் அனுப்ப வேண்டும். ஆலைக்கு கரும்பு சப்ளைசெய்யும் விவசாயிகளுக்கு பணப்பட்டு வாடா உரிய நேரத்தில் வழங்கப்படுகிறது. எனவே, வருகிற அர வைப்பருவத்திற்கு அதிக ளவு விவசாயிகள் கரும்பு நடவு செய்ய வேண்டும்.

மேலும் தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.215 அறிவிக்கப்பட்டுள் ளதால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்றார். இதில் தலைமை கரும்பு அலுவலர் மணிமாறன், கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவர் சசிகுமார், முனைவர் தங்கேஸ்வரி, வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, கரும்பு அலுவலர் ஆனந்த ஜோதி, உதவி பேராசிரியர் அனிதா, கரும்பு அலுவலர் கள் முருகேசன், கோபிசிகாமணி, பொன்ரங்கம், வெங்கடாசலம், தியாகராஜன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story