Skv பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கந்தம்பாளையம் எஸ் கே வி பள்ளி மாணவ மாணவிகள் 600க்கும் மேற்பட்டோர் திருச்செங்கோட்டில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு முன்னதாக போதை பொருள் குறித்த தெரு நாடகம் நடத்தி போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு தொடங்கிய இந்த பேரணியை திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளர் வளர்மதி கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்செங்கோடு வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, வழியாக சென்று வேலூர் வழியாக வாலரைகேட் பகுதியில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பேரணி நிறைவு பெற்றது. பேரணியில் போதை நமக்கு பகை, போதைப்பொருள் தவிர்ப்பீர், உடல் நலம் காப்பீர், உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் மாணவ மாணவிகள் ஊர்வலம் வந்தனர். இந்த பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பொதுமக்களுக்கு போதை பொருள் பயன்படுத்துவது உடல் நலத்தை கெடுக்கும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
Next Story




