தமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு:ஐடி ஊழியர் கைது 

தமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு:ஐடி ஊழியர் கைது 
கைதான ஐடி ஊழியர்
பெங்களூரில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பிய ஐடி ஊழியர் கைது  செய்யப்பட்டார்

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (62). கன்னியா குமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளராக உள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஏழாம் தேதி முகநூலில் விஜி ஜோன்ஸ் என்பவரது ஐடியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ் ஆகியோர் மீது மிகவும் தரம் தாழ்ந்து அவதூறு குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து உடனடியாக தக்கலை போலீஸ் நிலையத்தில் வக்கீல் ஜோசப் ராஜ் புகார் அளித்தார். போலீசார் விசாரித்த போது அந்த நபர் திங்கள்சந்தை பகுதியை சேர்ந்த விஜி ஜோன்ஸ் (40) என்பதும் பெங்களூருவில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. அவர் குடும்பத்துடன் பெங்களூரில் தங்கியுள்ளார். இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்த விஜி ஜோன்ஸ் தலைமறைவானார்.

அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூருக்கு சென்ற தக்கலை தனிப்படை போலீசார் நேற்று பெங்களூர் சிவாஜி நகர் பகுதியில் தனியார் லாட்ஜில் தங்கி இருந்த ஜோன்சை கைது செய்தனர். பின்னர் போலீசார் தக்கலை காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story