மந்தமான மீன்பிடி தொழில் - கைகொடுக்குமா கிளி மீன் சீசன்

மந்தமான மீன்பிடி தொழில் - கைகொடுக்குமா  கிளி மீன்  சீசன்
குளச்சலில் குவிந்த கிளி மீன்கள்
குளச்சலில் செம்மீன் எனப்படும் கிளி மீன்கள் சீசன் துவங்கியதால் போதிய மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து வந்த மீனவர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டம் குளச்சலில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. தற்போது குளச்சலில் மீன் பிடி சீசன் மந்தமாகி உள்ளதால் மீன் வரத்து குறைந்துள்ளது. குறைவான விசைப்படகுகளே கடலுக்கு சென்றுள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக குளச்சலில் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின. இவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. ஓரளவு செம்மீன் எனப்படும் கிளி மீன்கள் கிடைத்தன. இவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் வைத்து ஏலமிட்டனர். ஒரு கிலோ கிளி மீன் தலா ரூ.180 வரை விலைபோனது. இதனை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். கிளி மீன் சீசன் தென்பட்டுள்ளது ஆறுதலாக உ'ள்ளது. தொடர்ந்து கிடைக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும் என மீனவர்கள் தெரிவித்தார்.

Tags

Next Story