மேட்டூரில் பத்ரகாளியம்மன் கோவிலில் சின்ன தேரோட்டம்

மேட்டூரில் பத்ரகாளியம்மன் கோவிலில் சின்ன தேரோட்டம்

சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே மேச்சேரியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் சின்னதேரோட்டம் நடைபெற்றது.


சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே மேச்சேரியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் சின்னதேரோட்டம் நடைபெற்றது.

மேட்டூர் அருகே மேச்சேரியில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. மிகவும் ரசித்தி பெற்ற இக்கோவிலில் மாசி மக தேரோட்டம் விழா கடந்த 14-ம்தேதி தேர் பொங்கல் சுவாமி புறப்பாடுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நேற்று முன்தினம் (புதன்கிழமை)இரவு 11மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும்., நேற்று அதிகாலை 4.30மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிலையில் மாலை மாலை 4 மணிக்கு சின்ன தேரோட்டம் துவங்கியது.இதில் ஏராளமான பக்தர்களுடன் கலந்து கொண்டு சின்ன தேரை வடம் பிடித்து இழுத்து சென்றார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற சின்ன தேர் கோவில் வளாகம் முன்பு நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. நாளைமாலை 4 மணிக்கு பெரிய தேரோட்டம் நடைபெறுகிறது. 26ம்தேதி திங்கட்கிழமை இரவு 10மணிக்கு சத்தாபரணமும் ,27ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு கொடி இறக்கம், மஞ்சள் நீராட்டுவுடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags

Next Story