கோவைக்காக மாஸ்டர் பிளான் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது-அமைச்சர் முத்துசாமி.
முத்துசாமி ஆய்வு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய கண்காட்சியை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் 2023ம் ஆண்டை ஐ.நா. சபை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. அதனடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவித்தார்.தமிழகத்தை பொருத்தவரை சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல பேர் முன்னெடுத்து செய்து வருவதாகவும் முதல்வரின் முயற்சி காரணமாக சிறுதானிய விழிப்புணர்வுகளில் பல்வேறு தரப்பினர் பங்கெடுத்துள்ளதாக கூறினார்.
சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முதல் நோக்கம் எனவும் நோய்கள் வராமல் தடுக்க சிறுதானியங்களை முறையாக பயன்படுத்தினால் சரியானதாக இருக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகளை ஊக்கப்படுத்தவும் அவர்களுக்கு உதவி செய்யவும் வேண்டும் எனவும் உண்மையில் சிறுதானியங்களை பயன்படுத்துவது அனைவருக்கும் நல்லது என்றார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறுதானியங்கள் அரங்கம் அமைக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளனர் இதனை செயல்படுத்த ஆட்சியரும் உறுதியளித்துள்ளதாக கூறியவர் கிராமங்களில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளதாகவும் நகரவாசிகள் திசை மாறிய நிலையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது சரியாக இருக்கும் என தெதிவித்தார்.சிறுதானிய கொள்முதலை ஊக்கவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் விவசாயிகளுக்கு அரசு பக்க பலமாக இருக்கும் எனத் தெரிவித்தார். கள் இறக்க அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு இது குறித்து கள ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் இது குறித்து பின்னர் பதில் அளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாகவும் ஆட்சியர்,மாநகராட்சி அதிகாரிகள் நோய் பரவலை தடுப்பதில் கவனத்துடன் செயலாற்றி வருகின்றார் என்றார்.
போலி மதுபானங்கள் டாஸ்மாக் கடையில் இருக்காது எனவும் வெளியில் போலி மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது காவல் துறை எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியவர் போலி மதுபானங்களால் டாஸ்மாக் விற்பனை சரியவில்லை என்றார். போலி மதுபான விற்பனையை தொடர்ச்சியாகவோ தொழிலாகவோ செய்ய முடியாது எனவும் காவல் துறை நடவடிக்கை காரணமாக போலி மது விற்பனை செய்ய முயல்பவர்கள் ஒவ்வொரு நாளும் இடத்தை மாற்றுவதாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தார்.மேலும் கோவைக்காக மாஸ்டர் பிளான் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் மாஸ்டர் பிளான் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.