விருதுநகரில் சிறுதானிய திருவிழா
சிறுதானிய திருவிழா
விருதுநகர் கே வி எஸ் நடுநிலைப் பள்ளியில் சிறுதானிய திருவிழா நடைபெற்றது
விருதுநகர் கே வி எஸ் நடுநிலைப் பள்ளியில் சிறுதானிய திருவிழா நடைபெற்றது
விருதுநகர் கே வி எஸ் நடுநிலைப் பள்ளியில் சிறுதானிய திருவிழா நடைபெற்றது.
விருதுநகர் கே.வி.எஸ் நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், மில்லட் புரமோஷனல் சொசைட்டி விருதுநகர், இன்டஸ் பிரதான், விருதுநகர் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை இணைந்து நடத்திய சிறுதானிய திருவிழாவினை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராஜேந்திரன் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து சிறுதானியம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சிறுதானிய உற்பத்தி அதிகரிப்பு, ஆரோக்கிய உணவு, மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவு, தொழில் முனைவோர் பயிற்சிகள், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் ஆகியவை குறித்தும் பல்வேறு அரசுத்துறைகள் மூலமாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்த சிறுதானிய உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்குகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார்.
Next Story



