கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவு கண்காட்சி

கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவு கண்காட்சி
X

கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவு கண்காட்சி

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், சிறுதானிய உணவு கண்காட்சி நேற்று நடந்தது. இதில், மகளிர் சுயஉதவி குழுக்கள், சுகாதாரத் துறை, உணவு பாதுகாப்புத் துறை, குழந்தை வளர்ச்சி திட்டம் ஆகிய துறையினர், தாங்கள் தயார் செய்த சிறுதானிய உணவு வகைகளை காட்சிப்படுத்தி இருந்தனர். சிறுதானிய உணவு கண்காட்சியை, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன் ஆகியோர் பார்வையிட்டனர். கண்காட்சியில் சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு பரிசுத்தொகையும், சிறுதானிய உணவு குறித்த கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு நற்சான்றிதழ்களையும், தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மேயர் மகாலட்சுமி, காஞ்சிபுரம் ஒன்றியக் குழு தலைவர் மலர்க்கொடி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story