சிறுதானிய உணவுத்திருவிழா

சிறுதானிய உணவுத்திருவிழா

சிறுதானிய உணவுகளை பெற்றோர்கள் தினமும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி தெரிவித்துள்ளார்.

சிறுதானிய உணவுகளை பெற்றோர்கள் தினமும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி தெரிவித்துள்ளார்.

சிறுதானிய உணவுகளை பெற்றோர்கள் தினமும் தங்களது குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி தெரிவித்துள்ளார்..

தமிழர்களின் பாரம்பரிய உணவில் பெரும் பங்கு வகித்தது சிறுதானியங்கள் என்பதை பல்வேறு இலக்கியங்கள் மூலம் அறிந்து சிறுதானியமே நமது பாரம்பரிய உணவு என சிறப்பித்து வருகின்றது. பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இன்றைய காலச்சுழலால் பல மருந்து தெளிப்பு காரணமாக உணவு முறைகளால் பல நோய்கள் வருவதால் சிறுதானியமே வருங்கால உணவு என செல்கின்றோம் ஆகையால் தான் சர்வதேச சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு அரசு துறைகள் தன்னார்வலர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என பலர் பங்கேற்ற மாபெரும் சிறுதானிய உணவுத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

30 அரங்குகளில் நூற்றுக்கணக்கான சிறுதானிய உணவுகளை தயார் செய்து வகை வகையாக காட்சிப்படுத்தி இருந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி காட்சிப்படுத்தப்பட்டிருந்த உணவு வகைகளை பார்வையிட்டதோடு சாப்பிட்டு பார்த்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஒருவரது உடல் ஆரோக்கியம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களை பொறுத்தே அவர்களது எதிர்காலம் இருக்கும் அறிவியல் வளர்ந்து வரும் இக்கால கட்டத்தில் பல்வேறு உடல் உபாதைகளும் புதிய வகை நோய் தொற்றுகளும் ஏற்பட்டு வருகிறது எனவும் எனவே சிறுதானிய உணவுகளை பெற்றோர்கள் தினமும் தங்களது குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார்..

Tags

Next Story