சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சி: சுய உதவி குழுவிற்கு முதல் பரிசு

சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சி: சுய உதவி குழுவிற்கு முதல் பரிசு

உணவு கண்காட்சியை பார்வையிடும் ஆட்சியர்

சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சியில் சுய உதவி குழுவிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை ஐக்கிய நாடுகள் சபையினால் 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு இடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவு திருவிழா நடத்தப்படும்.

என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நேற்று நடந்தது கண்காட்சியில் சிறுதானிய உணவின் நன்மைகள் பலன் குறித்து விவரங்களுடன் சுய உதவி குழுக்கள் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் சார்பில் 25 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை கலெக்டர் மெர்சிரம்யா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதில் சிறப்பான முறையில் சிறுதானிய உணவு வகைகளை காட்சிப்படுத்திய அன்னவாசல் ஒன்றியம் ஓம் சக்தி சுய உதவி குழு முதல் பரிசாக ரூபாய் 5000, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் அரிமளம் மற்றும் அன்னவாசல் ஒன்றியத்துக்கு இரண்டாம் பரிசாக ரூபாய் 4000, ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி நுகர்வோர் குடிமக்கள் மன்றங்களுக்கு மூன்றாம் பரிசாக ரூபாய் 1500 வழங்கப்பட்டது.

Tags

Next Story