திருச்செங்கோட்டில் சிறுதானியம் உணவுப் பெருவிழா

சிறுதானிய உணவுதிருவிழா
.சிறுதானியம் உயிர்தானியம் என்ற வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் கோரிக்கையை ஏற்று 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு. கருணாநிதி அவர்களின் ஆலேசானையின் படி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறையின் மாணவிகள் வெகு பிரம்மாண்டமான வகையில் சிறுதானிய உணவு திருவிழாவை இன்று கொண்டாடினர்.
இப்பெருவிழாவிற்கு உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி Dr.K.C.அருண் M.B.B.S., மற்றும் எலச்சிபாளையம் உணவு பாதுகாப்பு அதிகாரி திரு.V.கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 1150-ற்கும் மேற்பட்ட சிறுதானிய உணவு வகைகளை மிக பிரமாண்டமாக காட்சிக்கு வைத்து விற்பனை செய்தனர். இவ்விழா சிறுதானிய உணவின் மகத்துவத்தை பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது.
மேலும் இவ் விழாவில் பார்வையாளர்களாக சுமார் 5000 க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று சிறு தானிய உணவு வகைகளை பார்த்தும் அதன் பயன்களை அறிந்து ருசித்தும் மகிழ்ந்தனர். மேலும் இவ்விழாவில் மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி, துணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரர் இணைச்செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராகநிதி அர்த்தநாரீஸ்வரர் துணைத் தாளாளர் கிருபாநிதி இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, நிர்வாக இயக்குனர் டாக்டர் குப்புசாமி, தலைமை நிர்வாகி சொக்கலிங்கம் கல்லூரின் முதல்வர் முனைவர் திருமதி பி.பேபி ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ் விழாவினை ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை தலைவர் முனைவர் திருமதி. மலர்விழி மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.
