திருப்பூரில் சிறுதானிய உணவு திருவிழா

திருப்பூரில் சிறுதானிய உணவு திருவிழாவை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் துவக்கி வைத்தார்.

திருப்பூரில் சிறுதானிய உணவு திருவிழாவை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் துவக்கி வைத்தார். சிறு தானியங்களை செய்யப்பட்ட வெவ்வேறு உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மத்திய அரசு இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவித்ததை தொடர்ந்து சிறுதானிய உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் , உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு சிறுதானிய வகைகளான சாமை , திணை , கேழ்வரகு கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களால் செய்யப்பட்ட பிரியாணி , சாம்பார் சாதம் , இனிப்பு வகைகள் , கார வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story