திருச்சியில் சிறுதானிய உணவு திருவிழா

திருச்சியில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 30க்கும் மேற்பட்ட சிறு தானிய உணவுகள் சமைக்கப்பட்டு கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்கள். இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் ரிப்பன் வெட்டி சிறுதானிய உணவு திருவிழாவை துவக்கி வைத்தார். முன்னதாக பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற பலூன்களை வானில் பறக்க விட்டார். மேலும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் செல்பி பாயிண்ட் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

Tags

Next Story