திருவண்ணாமலையில் நாளை சிறுதானிய உணவுத் திருவிழா

திருவண்ணாமலையில் நாளை சிறுதானிய உணவுத் திருவிழா

திருவண்ணாமலையில் நாளை சிறுதானிய உணவுத் திருவிழா, கண்காட்சி

பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
திரு வண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (டிச.15) சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. 2023-ஆம் ஆண்டினை சர்வ தேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமி ழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவுத் திரு விழா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணா மலை மாவட்டத்தில் வெள்ளிக் கிழமை(டிச.15)காலை10மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது.விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகிக்கிறார். கண்காட்சியில் சிறு தானிய உணவின் நன்மைகள், பயன்கள் குறித்த விவரங்களுடன், சிறுதானிய உணவுகளை தயாரித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அரசுத் துறையினர், மகளிர் சுய உதவிக் குழுவினர், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், இளம் நுகர்வோர்களாகிய பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சியை பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு பயனடையலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story