சிறுதானிய விதைகள்: விராலிமலை விவசாயிகளுக்கு அழைப்பு

சிறுதானிய விதைகள்: விராலிமலை விவசாயிகளுக்கு அழைப்பு

வேளாண் விரிவாக்க மையம்

சிறுதானிய விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுவதாக விராலிமலை விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வேளாண்மை துறையில் நடப்பு 2024-25 நிதியாண்டில் பல்வேறு மானிய திட்டங்களின் கீழ் சான்று பெற்ற உயர்விளைச்சல் தரக்கூடிய ஆடிப்பட்டத்துக்கு தேவையான சிறுதானிய விதைகளான கேழ்வரகு, குதிரைவாலி, பயிர்வகை பயிர்களான உளுந்து, தட்டைப்பயிறு,

பச்சை பயிறு, எண்ணெய்வித்து பயிரான நிலக்கடலை விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிறுதானிய விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சிறு தானிய விதைகள் பயிறு வகைகள் 50% மானிய விலையிலும் நிலக்கடலை விதைகள் கிலோ 40 மானிய விலையிலும் விராலிமலை நீர் பழனியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. திரவ உயிர் உரங்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் உழவன் செயலில் முன்பதிவு செய்து பயன்பெறலாம் அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story