திருவண்ணாமலையில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலையில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

உணவுத் திருவிழாவை தொடக்கி வைத்த ஆட்சியர்


திருவண்ணாமலையில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரும் பருவத்தினர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் இரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் அனைத்து வட்டாரங்களிலும் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம், தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் திட்டத்தின் மூலம் “இரத்த சோகை இல்லாத கிராமம்" குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மூலம் தயார் செய்த உணவு பொருட்களைக் கொண்டு பாரம்பரிய உணவு திருவிழா 06.11.2023 மற்றும் 07.11.2023 இரண்டு நாட்கள் ஊராட்சி அளவில் நடத்தப்பட்டது.

ஊராட்சி அளவில் தேர்வு செய்யப்பட்டவர்களை கொண்டு 09.11.2023 முதல் வட்டார அளவில், உணவு திருவிழா நடத்தப்பட்டது. வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேற்று திருவண்ணாமலை வட்டாரம் வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ. ரிஷப் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் பா. அ.ஸையித்சுலை மான் அனைவரையும் வரவேற்றார். இத் திருவிழாவில் கம்பு, சோளம், திணை, சாமை மற்றும் கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை கொண்டு பலவிதமான உணவு பொருட்கள் கண்காட்சியாக வைக்கப் பட்டு அதன் பயன்களை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த உணவுத் திருவிழாவில் அனைத்து உதவி திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட முதல் மூன்று நபர்களுக்கு தலா ध्रु.5000 रू.4000 ₹.3000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு பரிசாக இரண்டு நபர்களுக்கு ₹.5000/, ஆறுதல் பரிசாக 3 நபர்களுக்கு ரூ.6000/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவில் பங்கு பெறுவர்.

Tags

Next Story