இராசிபுரத்தில் சிறு தானியங்கள் உணவுத் திருவிழா

இராசிபுரம் ஶ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற உணவு திருவிழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள ஶ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரியில், சிறுதானியங்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரியின் தலைவர் மற்றும் தாளாளர் டாக்டர் கே. குமாரசுவாமி தலைமை வகித்தார். இராசிபுரம் விவேகானந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் என். மாணிக்கம் முன்னிலை வகித்தார். இதனை ஊட்டச்சத்து ஆலோசகர்கள் விகாஸ் சாபு, வைஷாலி சாபு உள்ளிட்டோர் தொடங்கி வைத்து, சிறுதானிய கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த சிறுதானியங்களால் தயார் செய்யப்பட்ட பல்வேறு உணவு வகைகள், கம்பு சோளம் திணை உணவு வகைகள், சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட கஞ்சி, கொழுக்கட்டை அடை, வடை, மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு பயன் அடைந்தனர். சிறுதானியங்களால் ஏற்படும் பயன்கள் குறித்து அனைவருக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், சிறுதானிய உணவுகள் குறித்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக நிகழ்ச்சியில், தலைமை உரையாற்றி பேசிய ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி தலைவர் டாக்டர் கே. குமாரசுவாமி, மத்திய அரசின் பெரு முயற்சியால் ஐநா சபை 2023 ஆம் ஆண்டு சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது நமது நாட்டில் சிறுதானிய உணவு உற்பத்தி அதிகரித்து அது தொடர்பான வணிகம் பெருகி உள்ளது. மேலும் இளைஞர்கள் இளம் பெண்கள் சிறுதானிய உணவை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் இதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயம் அமையும் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றி பேசிய விகாஸ் சாபு மற்றும் வைஷாலி சாபு ஆகியோர், இராஜஸ்தான் மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டம் பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோல தற்போது தென்னிந்தியாவிலும் சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டம் தொழிலும் சந்தைப்படுத்துதலும் முன்னேற்ற பாதையில் சென்று வருகின்றன. இனி வரும் காலம் சிறுதானிய உணவுகளின் காலமாக அமையும். எனவே இன்றைய இளைஞர்கள் மாணவ மாணவிகள் சிறுதானியங்களின் பயன்பாட்டை தொடர்ந்து அதிகரித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு விதமான நோய் தடுப்பு அரணாக சிறுதானியங்கள் அமைந்துள்ளன. எனவே குழந்தை பெற்ற தாய்மார்கள் இளம்பெண்கள் சிறுதானியங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், இராசிபுரம் வித்யா மந்திர் கல்வி அறக்கட்டளை செயலாளர்கள் எஸ். சந்திரசேகர், வி சுந்தரராஜன், இன்ஜினியர் மாணிக்கம், ராசிபுரம் மூத்த மருத்துவர் டாக்டர் ஆர்.எம். கிருஷ்ணன், கல்வியியல் கல்லூரி முதல்வர் , உதவி பேராசிரியர்கள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story