பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்வு
சின்ன வெங்காயம்
பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் பல்வேறு காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விளைச்சல் குறைவின் காரணமாக பல்லாரி, சின்னவெங்காயம் மற்றும் மாங்காய் உள்ளிட்டவையின் விலையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ரூ.60-க்கு ஒரு கிலோ சின்னவெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.80 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தென்காசி மாவட்டத்தில் இலத்தூர் பகுதிகளில் இருந்து வரும் சின்ன வெங்காயமே அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story