சின்ன வெங்காயம் விலை சரிவு - விவசாயிகள் கவலை

சின்ன வெங்காயம் விலை சரிவு - விவசாயிகள் கவலை
சின்ன வெங்காயம் 
தென்காசியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20க்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கடையநல்லூர், பாவூர்சத்திரம், சுரண்டை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.20 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சின்ன வெங்காயம் விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Tags

Next Story