நெல் விதைப்பில் புகையான் நோய் - ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

நெல் விதைப்பில் புகையான் நோய் - ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

சேதமடைந்த நெற்பயிருடன் விவசாயிகள் 

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா உக்கடை கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பெரமானி. அவருடைய ஐந்து ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளார் . அவர் மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்படாததால் ஆற்றில் தண்ணீர் வராததால் அருகில் இலவச மின்சாரத்தினால் ஓடக்கூடிய ஆழ்குழாய் கிணறு வைத்துள்ள விவசாயிகளிடமிருந்து தண்ணீரை பெற்று விவசாயம் செய்து உள்ளார். மேலும் அவ்வப்போது பெய்த மழையும் அவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பயிர் வளர்ந்து கதிர் வளரக்கூடிய சூழ்நிலையில் அவருடைய 5 ஏக்கர் நிலப்பயிர் சாகுபடியில் புகையான் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர் சேதமடைந்ததாகவும் இனி அந்த வயலில் இருந்து நெல்மணியில் அறுவடை செய்து போட்ட முதல் எடுப்பது இயலாத காரியம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடன் வாங்கி சாகுபடி செய்துள்ளதால் எனக்கு உரிய இழப்பீடை மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Tags

Next Story