கவிழ்ந்த கடத்தல் மணல் லாரி - தப்பி ஓடிய லாரி உரிமையாளர் கைது
கைது செய்யப்பட்ட சதீஷ்
ததிருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சின்னூர் பகுதியை சேர்ந்த வைகுண்டன் என்கிற ஊமைத்துரை மகன் சதீஷ் .இவருக்கு சொந்தமான டிப்பர் லாரி உள்ளது. இவர் டிப்பர் லாரி மூலம் இரவு நேரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளுவது மற்றும் மணல் கடத்திலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு அதிவேகமாக டிப்பர் லாரியை இயக்கி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் நடமாட முடியாமல் அச்சத்துடன் இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
மேலும் சதீஷ் டிப்பர் லாரி மூலம் அதிக அளவில் மண் மற்றும் மணல் கடத்திலில் ஈடுபட்டு தமிழக அரசு சார்பில் புதிதாக போடப்பட்டுள்ள தார்சாலை வழியாக வருவதால் சாலைகள் குண்டு குழியமாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன என சமூக ஆர்வலர்கள் ஒருபுறம் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சதீஷ் அவரது டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்த போது சின்னூர் முருகன் கோயில் அருகே செல்லும் போது சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மணல் லோடோடு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
இச்சம்பவம் நேரில் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி காவல் உதவி ஆய்வாளர் அஜித்குமார்கவிழ்ந்த டிப்பர் லாரியை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும் இதன் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்து விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுனர் கைதாகிய நிலையில் டிப்பர் லாரி உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று டிப்பர் லாரி உரிமையாளரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது