வைக்கோல் போரில் மறைத்து மது பாட்டில்கள் கடத்தல்; போலீசார் விசாரணை
நெருங்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தேர்தல் விதிமுறைகள் நடத்தியது அதன் அடிப்படையில் அரசு மதுபான கடையில் ஒரு நபருக்கு 10க்கும் மேற்பட்ட மதுபாட்டுக்கள் வாங்கோ கூடாது கொடுக்கவும் கூடாது என உள்ளன இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து வாக்காளர்களுக்காக மதுபாட்டுகள் கொடுப்பதற்கு மினி லாரி மூலம் வைகோலை ஏற்றி அதற்குள் மறைத்து வைத்து சுமார் 1600 மது பாட்டில்கள் எடுத்துவரப்படுவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பெயரில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர வாகனச் சோதனையில் விழுப்புரம் அருகே தென்னமாதேவி பகுதியில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரியை தடுத்து சோதனை செய்தபோது அதில் ஏராளமான மது பாட்டில்கள் மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரிய வரவே போலீசார் மினி லாரி ஓட்டிவந்த விக்கிரவாண்டி அருகே உள்ள விஸ்வரொட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பது தெரிய வந்தது.
பின்னர் அவரை கைது செய்து போலீசார் விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த மது பாட்டில்களின் மொத்த மதிப்பு சுமார் 5 லட்சம் ஆகும்.