1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

தஞ்சாவூரில் 1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


தஞ்சாவூரில் 1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வரப் பெற்ற தகவலின்பேரில், தஞ்சாவூர் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா உள்ளிட்டோர் நேற்று முன்தினம் விளார் புறவழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் தலா 50 கிலோ வீதம் 36 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சுமை வாகன உரிமையாளரும், தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள காடுவெட்டிவிடுதி நடுத் தெருவைச் சேர்ந்தவருமான பாலமுருகன்(40), கீழத் தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ்(40) ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், மாரியம்மன் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு இருவரும் ரேஷன் அரிசியை வாங்கி, கால்நடை தீவனத்துக்காகவும், இட்லி மாவுக்காகவும் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

Tags

Next Story