கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல் - ஆட்டோ பறிமுதல்
கொல்லங்கோடு அருகே கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தி சென்ற ஆட்டோ மற்றும் 200 லிட்டர் மண்ணெண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் மீனவர்களின் ஃபைபர் படகுகளுக்கு அரசு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கி வருகிறது. இதை வியாபாரிகள் வாங்கி கேரளாவுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொல்லங்கோடு போலீஸ் நிலைய ஒட்டு கணேஷ்குமார் நேற்று மாலை மஞ்சதோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, அந்த வழியே பயணிகள் ஆட்டோ ஒன்று பக்கவாட்டு தார்ப்பாயை மூடிய நிலையில் கேரளா நோக்கி சென்றுள்ளது. சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு கேன்களில் 200 லிட்டர் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆட்டோ மற்றும் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கொல்லங்கோடு போலீசார் மண்ணெண்ணெய் எந்த பகுதியில் இருந்து கடத்திவிடப்பட்டது என்று குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story