ரேஷன் அரிசி கடத்தல்: குண்டர் சட்டத்தில் கைது

ரேஷன் அரிசி கடத்தல்: குண்டர் சட்டத்தில் கைது

ரேசன் அரிசி கடத்தியவர்

விழுப்புரத்தில் ரேஷன் அரிசி கடத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்திரவிட்டுள்ளர்.

விழுப்புரம் குடிமைப் பொருள் குற்ற புல னாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா, சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கடந்த 12-ந் தேதி விழுப்புரம் அருகே உள்ள அத்தியூர் திருக்கை சாலையில் ரோந்துப்பணியில் ஈடு பட்டனர்.

அப்போது சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1400 கிலோ எடையி லான ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தது டன், இது தொடர்பாக குமரேசன் மற்றும் விழுப்புரம் வண்டிமேடு விராட்டிக்குப்பம் பாதையை சேர்ந்த அரப்ஷா மகன் முபாரக் அலி(வயது 46) என்பவரை அடுத்தடுத்து கைது செய்தனர்.

இந்த நிலையில் கைதான முபாரக் அலி மீது ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 8 வழக்குகள் உள்ளதால், இவரது தொடர் குற்ற நடவ டிக்கையை தடுக்கும் பொருட்டு அவரை குண்டர் தடுப்பு சட்டத் தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் பழனி உத்தரவின்பேரில் போலீசார்,

முபாரக் அலியை குண்டர் தடுப்புசட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இதற்கான உத்த ரவு நகல் சிறையில் உள்ள முபாரக் அலியிடம் வழங்கப்பட்டது.

Tags

Next Story