ரேஷன் அரிசி கடத்தல் - இருவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் - இருவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

பைல் படம்

பழைய சூரமங்கலம் பகுதியில் 2.5 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் சிறையில் உள்ள இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார் பழைய சூரமங்கலம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மடக்கி விசாரணை நடத்தினர். அதில் 2 டன் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வேனில் வந்த பழைய சூரமங்கலத்தை சேர்ந்த சூர்யா (வயது 39), பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (37) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சூர்யா, மாணிக்கம் 2 பேரும் அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன்பேரில் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் சிறையில் உள்ள சூர்யா, மாணிக்கம் ஆகிய 2 பேரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.

Tags

Read MoreRead Less
Next Story