பந்தய சாலை நடைபாதையில் சந்தனமரம் வெட்டி கடத்தல்!

பந்தய சாலை நடைபாதையில் சந்தனமரம் வெட்டி கடத்தல்!

சந்தனமரம்  கடத்தல்

கோவை பந்தய சாலை நடைபாதை அருகே சந்தனமரம் வெட்டி கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பந்தய சாலை நடைபாதை அருகே சந்தனமரம் வெட்டி கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான நடைபாதையில் சிறுவர்களுக்கான பூங்கா அமைந்திருக்கும் வளாகத்தில் அருகே வளர்ந்து இருந்த சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய அளவில் வளர்ந்து இருந்த மரத்தை வெட்டி சென்றதும்,அருகில் மாவட்ட ஆட்சியர் இல்லம் மற்றும் வருவமான வரி அலுவலகம் உள்ள இடத்தில் துணிகர சம்பவம் நடந்துள்ளது. மேலும் போலீசார் ரோந்து பணியில் வழக்கமாக ஈடுபடும் இடத்தின் துணிகர சம்பவம் நடத்துள்ளது.

இந்நிலையில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பந்தயம் சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தனிப்படை அமைத்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story