தனியார் மாவு மில்லில் சாரை பாம்பு; பொதுமக்கள் அதிர்ச்சி

தனியார் மாவு மில்லில் சாரை பாம்பு; பொதுமக்கள் அதிர்ச்சி

தனியார் மாவு மில்லில் சாரை பாம்பு புகுந்ததால், பொதுமக்கள் அலறிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

தனியார் மாவு மில்லில் சாரை பாம்பு புகுந்ததால், பொதுமக்கள் அலறிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
கெங்கவல்லியில்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி ஆத்தூர் மெயின் ரோட்டில் தனியார் மாவு மில் செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல் ராகி, கோதுமை, அரிசி மற்றும் தனியா, மிளகாய் அரைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது, திடீரென மாவு மில்லுக்குள் பாம்பு புகுந்தது. அதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், கெங்கவல்லி தீயணைப்புநிலைய அலுவலர் செல்லப்பாண்டியன்(பொ) தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று. மெஷினுக்குள் தஞ்சமடைந்திருந்த சுமார் 6 அடி நீள சாரை பாம்பினை உயிருடன் பிடித்தனர். அதனை வனச்சரகர் ஒப்படைத்தனர். அவர், அந்த பாம்பினை வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டார்.

Tags

Next Story