வீட்டில் புகுந்த பாம்பு உயிருடன் பிடிபட்டது

வீட்டில் புகுந்த பாம்பு உயிருடன் பிடிபட்டது
X

பிடிப்பட்ட பாம்பு


கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம், டிபன்ஸ் காலனி முதல் தெருவில் வசித்து வருபவர் சுரேஷ், 36. இவரது வீட்டில், நேற்று பாம்பு ஒன்று புகுந்தது. அதை தொடர்ந்து, அவர் மறைமலை நகரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.

zஅதன்படி, மறைமலை நகர் தீயணைப்பு துறை நிலைய மேலாளர் கார்த்திகேயன் தலைமையில், ஐந்து பேர் கொண்ட தீயணைப்பு மீட்பு படையினர், அவரது வீட்டிற்கு வந்து, அங்கு பதுங்கி இருந்த, ஏழு அடி நீளமுள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர். பின், மறைமலை நகரில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில், பாம்பு விடப்பட்டது.

Tags

Next Story