வத்திராயிருப்பு அருகே பின்னிப்பிணைந்து விளையாடிய பாம்புகள்
பிணைந்து ஆடிய பாம்புகள்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் முதல் அத்திகோயில் செல்லும் வழியில் கான்சாபுரம் காலனி உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
காலனியை சுற்றி விவசாய தோப்புகள் அதிக அளவில் உள்ளது .இந்நிலையில் கான்சாபுரம் காலனி அருகே 2 கொடிய விஷமுடைய பாம்புகள் ஒன்றோடு ஒன்று பிண்ணிப் பிணைந்து விளையாடியதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் .மேலும் குடியிருப்பு அருகே பாம்புகள் இருப்பதால் காலனி பகுதிகள் மக்கள் மிகுந்த அச்சத்துடனே காணப்படுகின்றனர்.
பாம்புகளை பிடிக்க தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிப்பதற்குள் இரண்டு பாம்புகளும் அருகே இருந்த விவசாய தோப்பிற்குள் சென்றது . தற்போது வெயில் காலம் என்பதால் வத்திராயிருப்பு பகுதியை சுற்றி பகல் நேரங்களில் அதிக அளவு பாம்புகள் நடமாட்டம் இருந்து வருகிறது. சாலையில் வாகனங்களில் சென்று கொண்டிருக்கும் போதே பாம்புகள் சாலை கடக்கின்றன. இதனால் திடீரென பாம்புகளை சாலையில் பார்த்த இருசக்கர வாகன ஓட்டில் கீழே விழும் நிலையும் உள்ளது.தொடர்ந்து பாம்புகள் நடமாட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தீயணைப்புத் துறையினரும், வனத்துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.